முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திரத்திருவிழா முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ஆம் தேதி இரவு கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 6 மணிக்கு மேல் சுவாமிகள் சப்பரத்தில், தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேர் நிலையை 3 முறை வலம் வந்து சுவாமிகள் தேரில் அமர வைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து காலை 6.43 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினர்.விழாவையொட்டி, தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மீண்டும் தேரை இழுத்து நிலை சேர்த்தனர்.திங்கள்கிழமை (ஏப்ரல் 10) காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத் தேரோட்டமும் நடைபெற்றது

பால்குடம், காவடி எடுத்தல்

 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மகா தரிசனமும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.அதேபோல, ஈரோடு முனிசிபல் காலனி சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 8-ஆம் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை காவிரி ஆற்றின் கரையில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பாலமுருக சுவாமிக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், உபசார பூஜைகளும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று  மாலை 6 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகசுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. அதேபோல, திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும், பாலாபிஷேக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழவினர்செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்