எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 444 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் கிராமத்தினை சார்ந்தவரும், கடலூர் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த தண்டனைக் கைதியுமான பாலு தபெ.பூங்காவனம் என்பவர் சிறைச்சாலையில் இறந்ததை தொடர்ந்து நிவாரண தொகையாக ரூ.2,00,000ஃ-க்கான காசோலையை பூங்காவனம் என்பவருக்கு வழங்கப்பட்டது.மீன்வளத்துறையின் மூலம், எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் தபெ.ராஜமூர்த்தி என்பவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததையொட்டி, மரணமடைந்த மீனவரின் மனைவி எஸ்.சுவிதா என்பவரிடம் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணத்தொகை ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அனந்தராம், உதவி ஆணையர் (கலால்) இராஜேந்திரன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


