முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் டூ முடித்த மாணவ –மாணவியர்களுக்கு சில ஆலோசனைகள்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர் பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.  பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பி ரிவுகளை எடுத்துப் படித்த மாண வர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டா யிரத்திற்கும் குறைவு என்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் எம் பி பி எஸ் படிப்பில் இடம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. உயிரியல் படிப்புகளை எடுத்துப்படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்று ம் துணை மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகள் உள்ளன.

எம்.பி.பி.எஸ். : டாக்டர் பணி என்பது நல்ல வருவாய் தரக்கூடிய, பொது மக்க ளின் மரியாதைக்குரிய முக்கியப் பணி. டாக்டராக வேண்டு மானால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும். இது, ஐந்தரை ஆண்டு படிப்பு. தமிழ் நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி களில் எம் பி பி எஸ் படிப்பில் சேர நுழை வுத் தேர்வு இல்லை. தற்போது இந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (Nநுநுவு) நடத்து வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளி யிடப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரி வித்துள்ள போதிலும்கூட, தற்போது நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டு வரும் தமிழகத்தில், அதே நிலை இந்த ஆண்டும் தொடருமா என்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை மாணவர் கள் எதிர் பார்த்து இருக்கிறார்கள்.

எனினும், ஆந்திரம், காஷ்மீர் நீங்கலாக மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரி களில் உள்ள 15 சதவீத இடங்களில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் இந்தப் பொது நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதேபோல புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர் களும் இந்தத் தேர்வை எழுத வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்க ளைச் சேர்ப்பதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம் பி பி எஸ் படித்து முடித்த மாணவர்கள், மருத் துவப் பயிற்சிக்குப் பிறகு இந்திய மருத் துவக் கவுன்சலில் தங்களை டாக்டர்க ளாகப் பதிவு செய்த பிறகே டாக்டராக பணி புரிய முடியும். எம்.பி.பி.எஸ் முடி த்துவிட்டு அரசு பணியில் சேர விரும்பு பவர்கள் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர் வாணையம் நடத்தும் தேர்வு எழுதி அந்த வாய்ப்பைப் பெறலாம்.

மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பினால், அதற்காக மத்திய அரசு தேர்வாணையம் சிறப்புத் தேர்வை நடத் துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் பாதுகாப்பு, ரயில்வே துறைக ளில் டாக்டராக பணியாற்றமுடியும். மருத்துவக் காப்பீட்டு நிறுவ னங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மெடிக்கல் டிரான்ஸ் க்ரிப்ஷன், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியும் டாக் டர்கள், முது நிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.

பி.டி.எஸ். : பல் மருத்துவத்துக்கான இளநிலைப் பட்டப் படிப்பு இது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். பல் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, முகச் சீரமைப்பு, பல் லை அழகுபடுத்துதல் போன் றவை முக்கியத்துவம் பெற்று வருவதால் பல் மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டு மே உள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் பல இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஒற்றைச்சாளர முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கு அடுத்த படியாக பிடிஎஸ் படிப்யை மாணவர்கள் தேர்வு செய்கி றார்கள்.

பிடி எஸ் படித்து முடித்து பல் மருத்துவ கவுன்சலில் பல் மருத்து வராகப் பதிவு செய்த பிறகு பல் மருத்துவராகப் பணி புரியலாம். அனைத்து கார்ப்ப ரேட் மருத்துவ  மனைகளிலும் பல் சிகிச்சைக் கென்றே தனி யாக பிரத்யேகப் பிரிவு செயல்படுவ தால் அங்கேயும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பல் மருத்துவ சிகிச் சைக்கு தேவையான பொருட் களைத் தயாரிக்கும் நிறுவனங் கள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை வாய்ப்பு உள் ளது. பேரா டென்டல், டென்டல் மெட்டீரியல் அண்டு ஓரல் ஹைஜீ ன், டென் டல் டெக் னீஷியன் போன்ற டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்து முடி த்த மாணவர்கள் சேரலாம்.

பி.எஸ்சி. நர்சிங் : பொறுமை, அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் கூடிய பணி இது. பிஎஸ்சி நர்சிங் படிப்பைக் கற்றுத் தர ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இது நான்கு ஆண்டு கால பட்டப் படிப்பு. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவிகள் சேர்க்கப்படுகின் றனர். நர்சிங் டிப்ளமோ படிப்பிலும் மாணவிகள் சேரலாம். டிப்ளமோ படித்த மாணவிகள், மருத்துவ மனைகளில் நர்சாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற பிறகு, பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பத ற்கான வாய்ப்பும் இரு க்கிறது. படிப்பை முடித்து மாநிலத்தில் உள்ள நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதன் மூலம் அரசு மருத்துவ மனைகளில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்.

அரசு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன் ற இடங்களில் நர்சு பணிக ளுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய் யப் படுகிறார்கள். தனியார் மருத் துவமனைகளி லும் வேலை வாய்ப்பு கிடைக் கும். இந்தியா வில் மட்டுமல்லாது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அரபு நாடு களில் இந்திய நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமா க உள்ளது. நர்சிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படிக்கலாம்.

பார்மஸி : டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதியிருப்பதைப் பார்த்து மருந்து களைத் தருவதற்கான உரிமை உடையவர் கள் பார்மசிஸ்ட்டுகள் எனப்படும் மருந்தா ளுநர்கள் மட்டுமே. பார்மசிஸ்ட்டுகளாக டி. பார்ம், பி.பார்ம் படிப்புகளைப் படிக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கோவை மருத்துவக் கல்லூரிகளில் டி.பார்ம், படிப்பு உள்ளது. பி. பார்ம்., படிக்க தமிழகத்தில் பல பார்மஸி கல்லூரிகள் இருக்கின்றன. பி.பார்ம். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க் கப்படுகிறார்கள். மருந்தின் தன்மையை தெரிந்து வைத்திருப்பது டன், மருத்துவர்கள் பரிந்துரை க்கும் மருந்துகளை நோயாளிக்கு வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பார்மஸி படித்தவர் கள், இந்திய மருந்து கவுன்சிலின் மாநில கவுன்சிலில் பதிவு செய் திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் தோராயமாக 50 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. சொந்தமாக மருந்துக் கடைகளை வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்மஸி படித்திருக்க வே ண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்க ள் உள்ளன. அங்கும் பார்மஸி படித்த வர்களுக்கு வேலை கிடை க்கும்.

டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பார் மஸி பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படு கிறார்கள். பார்ம்.டி என்ற புதிய படிப்பு சில நிகர்நிலைப் பல் கலை க்கழகங்களில் அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்டு ள் ளன. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.

பிசியோதெரபி (பி.பி.டி.) : மிக முக்கியமான துணை மருத்துவப் படிப்பு இது. நீண்ட நாட்க ளாக முறையாக செயல்படாமல் இரு க்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் அவசி யமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப் பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகி ச்சை அளித்து வலியைப் போக்குவ தில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பணிக்கேற்ற வர்களைத் தயார் செய்வதற்காக உள்ள படிப்புதான் பிபிடி பட்டப் படிப்பு. இப்படிப்புக்காலம் நான் கரை ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலம் அரசு மருத்துவ மனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தேர்வு செய்யப்படுகி றார்கள். டாக்டர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.

ஆக்குபேஷனல் தெரபி : மனநலம் மற்றும் மனநலம் சார்ந்த உடல் கோளாறுகளுக்கானது ஆக்குபேஷனல் தெரபி. இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட  நடத்தைக்கான காரணங்களைக் கண்டறிந் து சிகிச்சை அளிப்பதுதான் இந்தப் படிப்பு. இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலி கிளினிக், மருத்துவமனைகள், மாற்று த் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!