முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை அழிக்க முடிவு செய்து விட்டது. அந்த திட்டத்தில் காந்தியின் பெயர் இருக்க கூடாது என முடிவு செய்தது பா.ஜ.க.வின் அரசியல் தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. இந்த திட்டத்திற்கு ஜி ராம் என்று பெயர் சூட்டி உள்ளனர். ஆனால் ஹே ராம் என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கி இருக்கின்றனர். பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக உள்ளது.

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். தற்போது மாநில அரசு 40 சதவீத நிதியை அளிக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் கூறுகின்றனர். இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன்.

காங்கிரஸ் ஆட்சியில் தனியார் சொத்துகள், தேசியமயமாக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் அரசு சொத்துகளை தனியார் மயமாக்கி வருகின்றனர். சாதியவாதம், மதவாதம் போன்றவற்றை வைத்து இயங்குகின்றனர். தற்போது திருப்பரங்குன்றத்தை பா.ஜ.க. அயோத்தியாக மாற்ற முயற்சிக்கிறது.

இதை கண்டிக்கும் வகையில் வருகிற 22-ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நான் கலந்து கொள்வேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர். பா.ஜ.க.விற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பணியை மேற்கொள்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து