எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்கள்சந்திப்பின்போது “திமுகவை தீயசக்தி என்றும், த.வெ.க.வை தூய சக்தி என்றும் விஜய் பேசியது பேசுபொருளானது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் இன்று, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது;
“நாங்கள் தீய சக்தி இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும்.
அவரைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய்யால் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். அவர், ஐநூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்போல் நாங்கள் இல்லை. பா.ஜ.க.வின் சி டீம்தான் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


