முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மட்டும் தான் முதியோர் உதவித்தொகை அதிக நபர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 
மதுரை -  இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தான் முதியோர் உதவித்தொகை அதிக நபர்களுக்கு வழங்கப்படுகிறது என்று திருமங்கலம் தொகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வருவாய் துறை அமைச்சர்
ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
 மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள மேல உரப்பனூர், கீழ உரப்பனூர், சித்தாளை, புங்ககுளம், நல்லபிள்ளைபட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன. இதில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர் கூறியதாவது
 புரட்சித்தலைவி அம்மா மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதனை 5 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். தற்போது அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றும் வண்ணம் கழக பொதுச்செயலாளர் சின்னம்மாவின் நல் ஆசியோடு கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். 1 லட்சம் பெண்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை 12,000 இருந்து 18,000 ரூபாய் உயர்வு, படித்த இளைஞர்களுக்கு உதவி தொகை உயர்வு, 500 மதுக்கடை மூடல், மீனவர்களுக்கு வீடு இப்படி தேர்தல் அறிக்கையில் நிறைவேற்பு திட்டத்திற்கு நடைபெற்ற பட்ஜெட்;டில் நிதி ஒதுக்கப்படுகிறது.
 அதே போல் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வகையில் தற்போது வறட்சியை போக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை அம்மா அரசு மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் சேதம், சுனாமி சேதம், நிலச்சரிவு என்று இயற்கை அழிவுக்கு தான் நிவாரணம் வழங்கி வரும் நிலையில் வறட்சிக்கு என்று நிவாரணம் வழங்கியது. தமிழகம் மட்டும் தான் அதை வழங்கியது. புரட்சித்தலைவி அம்மா தற்போது அம்மா காட்டிய வழியில் தற்போது வறட்சியில் பாதிப்படைந்த 32 லட்ச விவசாயிகளுக்கு அம்மா அரசு தற்போது நிவாரண உதவித்தொகையை வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
 சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், ஆதரவு அற்றோர், இப்படி பல தரப்பினர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 29 மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தான் 35 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அம்மாவின் அரசு நிச்சயம் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றும் மக்கள் சேவை செய்யும் அம்மாவின் அரசிற்கு நீங்கள் தொடர்ந்து நல்ஆதரவை தந்திட வேண்டும் என்று அவர் பேசினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. தமிழரசன், திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஐ. தமிழழகன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஜெயராமன், முன்னாள் தொகுதி கழக செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, சவுடார்பட்டி பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்