முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க சட்டப்சபை இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

10 தொகுதிகளில் ...
மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கான்தி தாக்‌ஷின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது இங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை தொடங்கி மாலை 5 மணிவரையில் 80 சதவித வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

திரிணாமுல் வெற்றி
தாக்‌ஷின்  தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சந்திரிமா பட்டாச்சார்யா 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் மீண்டும் தன்னுடைய பலத்தை காட்டி உள்ளது. மாநிலத்தில் மம்தாவிற்கு முன்னதாக நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பா.ஜ.க 2-வது இடம்
மேற்கு வங்காள மாநிலத்தில் கால் பதிக்க வேண்டும் என தீவிரமாக செயல்படும் பாரதீய ஜனதா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகப்பட்சமாக 56 சதவிதம் அதாவது 94686 வாக்குகளை பெற்று உள்ளது, இரண்டாவதாக பாரதீய ஜனதா 30.9 சதவிதம் அதாவது 52159 வாக்குகளை பெற்று உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளது. காங்கிரஸ் வெறும் 2234 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கிய பா.ஜனதா, இடதுசாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்