முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்: தமிழில் வாழ்த்திய பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  தமிழ் மக்கள்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டை யொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஏராளமான மக்கள் கோயில்களிலும் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் என தமிழில் டிவிட் செய்துள்ளார்.புத்தாண்டையொட்டி கேரளா, ஒடியா மக்களுக்கு விஷூ, மகா விஷூப சங்கராந்தி வாழ்த்துகளையும் பிரதமர் மோடி அவரவர் மொழிகளில் தெரிவித்துள்ளார். அசாம் மக்களுக்கும் பிரதமர் மோடி போஹாக் பிகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்