ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் விலேஜ் - ஆங்கிலம் ஏப் 21- வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      சினிமா
Smurfs-The Lost Village-6

ராஜா கோஸ்னேல் இயக்கத்தில் 2011 இல் வெளியான தி ஸ்மர்ஃப்ஸ் திரைப்படம், கற்பனை கதாபாத்திரங்கள் சிலவற்றை அநிமேஷன் வடிவில் உலவவிட்டு, ஓர் அழகான நகைச்சுவை நவீனத்தை வழங்கியது.

கர்கமேல் என்கிற ஓர் விசித்திர உயிரினம், அழகிய வடிவம் கொண்ட இந்த ஸ்முர்ப்ஸ் துரத்த, அவை, உயிரை காத்துகொள்ள, தங்களது சொந்த கிராமத்தை தேடி செல்வதே இப்படத்தின் சாரம். 2013 இல் வெளியான தி ஸ்முர்ப்ஸ் -2 திரைப்படம், கர்கமேல் , ஸ்முர்ப்ஸ் உயிரினங்களில் தென்படும் ஓர் அதிசய குணாதிசயத்தை களவாட, நாடீஸ் என்கிற உயிரினம் ஒன்றை அனுப்பிவைக்கிறது. ஸ்முர்ப்ஸ் இன தலைவியான, ஸ்மர்‌ஃபெட் ஐ, கர்கமேல் தக்க முற்படுகிறது! இரண்டாம் பாகத்தின் கதை அதுவே!முந்தைய இரு படங்களும், பேயோ(Peyo) என்பவர் உருவாக்கிய ஸ்முர்ப்ஸ் காமிக் புத்தக தொடரை தழுவி உருவாக்கி இருந்தார்கள்.இந்த மூன்றாம் பதிப்பில், ஸ்மர்‌ஃபெட் மற்றும் அவளது மூன்று நண்பர்கள்,ப்ரேநீ(டாநீ புதி), க்லம்ஸீ(ஜ்யாக் ம்க்ப்ரேயர்ர்) மற்றும் ஹெஃப்டீ(ஜோ மங்களினோ) ஆகியவர்களோடு, கர்கமேல் கையில் சிக்கி விடாமல் இருக்க, ஒரு அடர்ந்த காடு வழியே பயணிக்க, சில வித்தியாசமான, விசித்திரமான, உயிரினங்களை சந்திக்க நேரிடுகிறது! இறுதியில், அவர்கள், சொந்த கிராமத்திற்கு சென்று அடைந்தார்களா என்பது தான் கேள்வி!ஏறக்குறைய 60 million அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், 90 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்டது. க்ரிஸ்டொஃபர் லெந்நர்ட்ஸ் இசை அமைத்துள்ளார்.கெல்லி ஆஸ்‌பரீ படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பு மற்றும் வெளியீடு- சோனி பிக்சர்ஸ்

இதை ஷேர் செய்திடுங்கள்: