முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட தயார்: சீனா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், கொரியா தீபகற்ப பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.

கொரியா தீபகற்ப பகுதியில் தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. வடகொரியாவானது அணு ஆயுதங்களை சோதனையில் ஈடுபட்டிருப்பதோடு அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் தயாரித்து குவித்து வருகிறது. தென்கொரியா மீது வடகொரியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போர்க்கப்பல்:-

வடகொரியாவை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சீனா கருதுவதால் அந்த நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வடகொரியா தயாராகி வருகிறது. இதனால் கொரியா கடல் பகுதிக்கு அமெரிக்க போர்க்கப்பல் சென்றுள்ளது. வடகொரியா மீது அமெரிக்கா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால் கொரியா தீப கற்ப பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சீனா தயார்:-

இந்தநிலையில் கொரியா தீபகற்ப பகுதியில் அமைதி நிலவ அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட தயார் என்று சீனா தெரிவித்துள்ளது. ஆயுதங்களை தொடர்ந்து சோதனை செய்யும் வடகொரியாவுக்கும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் மும்முரத்தில் இருக்கும் வடகொரியாவுக்கு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள 24 மணி நேரத்தில் சீனா இதை தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுதமற்ற பகுதியாக மாற்றவும் அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுதமற்ற நிலையை உருவாக்கவும் அமைதியை காக்கவும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என்று அந்தநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லு ஹங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

வடகொரியாவுக்கு நல்லது:-

சிரியாவில் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதற்து எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இருந்து அமெரிக்காவின் பலம் மற்றும் அதிபர் டிரம்பின் உறுதித்தன்மை ஆகியவைற்றை உலகம் கடந்த 2 வார காலமாக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் பென்ஸ் கூறினார். கொரியா தீபகற்ப பகுதியில் அதிபர் டிரம்ப்பின் உறுதிப்பாட்டினையும் அமெரிக்க ராணுவத்தின் பலத்தையும் வடகொரியா சோதித்து பார்க்காமல் இருப்பது நல்லது என்றும் பென்ஸ் எச்சரித்தார்.

கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஆத்திரமூட்டும் வகையில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது நிறுத்தப்படும் என்று லு  ஹங் தெரிவித்தார். வடகொரியாவானது  ஸ்திரமற்றதன்மையை உருவாக்குவதையும் அணு ஆயுத சோதனை செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  எச்.ஆர். மைக் மாஸ்டர் குறிப்பிட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்து ஹங் அது குறித்தும் நாங் கவனத்தில் கொண்டுள்ளோம் என்றார். கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது அனைத்து தரப்பினர்களுக்கும் நல்லது என்றும் ஹங் தெரிவித்தார். தீபகற்ப பகுதியில் அமைதிக்கு பேச்சுவார்த்தை மற்றும்  ஆலோசனை நடத்துவதும்தான் நல்லது என்றும் ஹங் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்