முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கையை பாதுகாப்பதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இயற்கையை பற்றியும், இயற்கையை பாதுகாப்பதிலும் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பூமி தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார். இயற்கையையும் இயற்கை வளத்தையும் பாதுகாப்பதில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். பூமி தினமானது தாய் பூமிக்கு நன்றி தெரிவிக்கும் தினமாகும். இந்த பூமி தினத்தில் நமது பூமியை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் மோடி கூறியுள்ளார்.

கிரகங்கள், பறவைகள், விளங்குகள் ஆகியவைகளுடன் நாம் அனைவரும் இணக்கமான முறையில் வாழ்க்கையை நடத்த வேண்டும். இதனுடன் நமது பூமியையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவைகளை பாதுகாத்து நமது வருங்கால சன்னதியினர்களுக்கு விட்டுச்செல்ல வேண்டியது நமது கடமையாகும் என்றும் மோடி மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்