முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி நிதி ஆயோக் கூட்டம்: மம்தா, கேஜ்ரிவால் புறக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புறக்கணித்தனர்.

மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நேற்றுக் காலை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தவிர பிற மாநில முதல்வர்கள் அனைவரும் பங்கேற்றனர். அதேசமயம் கேஜ்ரிவால் சார்பில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பங்கேற்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் 15 ஆண்டுகால தொலைநோக்கு திட்டம் பற்றி இக்கூட்டத்தில் முக்கிய விவகாரமாக பேசப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜவடேகர், ராவ் இந்தர்ஜித் சிங், ஸ்மிருதி இரானி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்