முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: மும்பை அணியிடம் டெல்லி அணி போராடி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஜாகீர்கான் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 28, பொலார்டு 26, ஹர்திக் பாண்டியா 24, கிருனல் பாண்டியா 17 ரன்கள் எடுத்தனர். பார்த்தீவ் படேல் 8, நிதிஷ் ராணா 8, ரோஹித் சர்மா 5, ஹர்பஜன் சிங் 2 ரன்கள் சேர்த்தனர். ஜான்சன் 7, மெக்லீனகன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா, கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் வீழ்த்தினர். இவர்கள் இருவரும் சேர்ந்து 8 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே வழங்கினர். இவர்களது பந்து வீச்சுதான் மும்பை அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது.

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் பேட் செய்த டெல்லி அணி 21 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக் கெட்களை இழந்தது. தொடக்க வீரரான ஆதித்யா தாரே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஹர்திக் பாண்டி யாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். சஞ்சு சாம்சன் 9, ஸ்ரேயஸ் ஐயர் 6, கோரே ஆண்டர்சன் 0 ரன்களில் மெக்லீனகன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
அடுத்த களமிறங்கிய ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பும்ரா பந்திலும், கருண் நாயர் 5 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்திலும் நடையை கட்ட டெல்லி அணி 6.3 ஓவர்களில் 24 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தள்ளாடியது. இந்த சூழ்நிலையில் ரபாடாவுடண் இணைந்த மோரிஸ் போராடினார்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. மெக்லீன கன் வீசிய 18-வது ஓவரில் மோரிஸ் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த ஓவரை வீசிய பும்ரா முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 4-வது பந்தில் ரபாடாவை போல்டாக்கினார்.

ரபாடா 39 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் எஞ்சிய 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹெர்திக் பாண்டியா வீசினார். முதல் பந்தில் கம்மின்ஸ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்து வைடானது. 2-வது பந்தில் மோரிஸ் பவுண்டரியும், அடுத்த பந்தில் 2 ரன்களும் எடுத்தார். இதனால் 3 பந்துகளுக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது.

4-வது பந்தில் மோரிஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனால் ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மோரிஸ் 52, கம்மின்ஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்