முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான போட்டி: பார்சிலோனா அணிக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்சி !

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, 2 கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.

காயம்

பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் மெஸ்சி. நேற்று முன்தினம் நள்ளிரவு எல் கிளாசிகோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியின் 20-வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும், ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் பலமாக தாக்கியது. இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

500-வது கோல்

இதற்காக கொஞ்சம் கூட அஞ்சாமல் வாயின் மருதுடன் கூடிய துணையை வைத்துக் கொண்டு தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பயனாக 33-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் 92-வது நிமிடத்தில் தனது வரலாற்று சாதனைமிக்க கோலை அடித்து பார்சிலோனா அணியை வெற்றி பெற வைத்தார். 2-வது அடித்த கோல் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 500-வது கோலாகும். மெஸ்சி பார்சிலோனா அணிக்காக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்