முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திமொழி வளர்ச்சிக்குத்தான் நடவடிக்கை எடுக்கிறோம்: மத்திய மந்திரி கூறுகிறார்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தி மொழியை யாரும் மீதும் நாங்கள் திணிக்கவில்லை. இதர மொழிகளைப்போல இந்தி மொழி வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிச்சு தெரிவித்துள்ளார்.

இந்திமொழி பேசாத மாநிலங்களில் இந்திமொழி திணிக்கப்படுகிறது என்று ஒரு சிலர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுகிறது. இந்தியாவை இந்தி நாடாக்க முயற்சி செய்கிறது என்று மத்திய அரசு மீது தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. இந்தி மொழியை கற்றுக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியிருந்தார்.

மேலும் இந்தி மொழியை யாரும் மீதும் மத்திய அரசு திணிக்கவில்லை. இதர பிராந்திய மொழிகள் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பதுபோலத்தான் இந்திமொழி வளர்ச்சிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கிரண் ரிச்சு நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். ஆட்சி மொழி இலாகாவுக்கும் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பொறுப்பாக இருக்கிறார்.

ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் இந்தியில் படிக்கலாம், பேசலாம் முடிந்தால் இந்தியில் மட்டும் அறிக்கை வெளியிடலாம் என்று ஆட்சி  மொழிகள் விவகாரத்திற்கான பாராளுமன்ற கமிட்டி செய்துள்ள சிபாரிசை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் விமான அறிவிப்பு பலகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் மற்றும் இந்திமொழி சம்பந்தமாக பல்வேறு சிபாரிகளுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையொட்டி மொழி பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்