முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ இராமானுஜர் 1000வது அவதார திருவிழாவினை முன்னிட்டு உணவு பாதுகாப்பு குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ இராமானுஜர் 1000வது திரு அவதார திருவிழாவினை முன்னிட்டு உணவை வியாபார நோக்கத்துடனோ அல்லது அன்னதானமாகவோ வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 நிபந்தைக்குட்பட்டு பாதுகாப்பு மற்றும் தரமான உணவு வழங்க அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

சீர்கேடு இன்றி

அன்னதானம் செய்பவர்கள் மற்றும் உணவு விடுதிகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயார் செய்ய பாதுகாப்பான குடிநீர், உணவு தயாரிக்கும் இடம் மற்றும் விநியோகம் செய்யும் இடம் சுகாதார முறையில் இருந்திடவும், உணவு தயாரிக்கும் போது காலாவதியான, கலப்படமான, தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது. உணவு தயாரிக்கும் பொழுது அனுமதிக்கப்பட்ட நிறஊக்கிகள், வாசனை பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், தயார் செய்யப்பட்ட உணவை விநியோக்கும் முன்பும், விற்பனைக்கு முன்பும் உணவு மாதிரி எடுத்து வைத்த பிறகு பாதுகாப்பான முறையில் (, பூச்சிகள் மற்றும் தூசுபடாமல் மூடி) விநியோகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் வேண்டும். உணவுத் தட்டு மற்றும் பேப்பர் கப்புகளை சுற்றுப்புற சீர்கேடு இன்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் அமைத்திட வேண்டும்.

அன்னதானம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்க கூடாது. உணவு தயாரிப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்கள் தன்சுத்தம் பேணப்பட வேண்டும். தாங்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் என்பதை உணர்ந்தும், மீறினால் துறை ரீதியாக நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பபடுவீர்கள் என்பதையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெறுவதற்கு மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருத்து நிர்வாகத் துறை, 42 , இரயில்வே ரோடு, துணை இயக்குநர் நலப்பணிகள் வளாகம், காஞ்சிபுரம் -631 501, தொலைப்பேசி எண்: 044-27233540 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்