முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ரிசர்வ் போலீசார் மீது மவோயிஸ்ட் தாக்குதல் கோழைத்தனமானது: மத்திய அமைச்சர் ஜவடேகர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தியது கோழைத்தனமான செயல் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பஸ்தார் பகுதியில் இருக்கும் காலபதார் என்ற இடத்தில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் மீது 300 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்பட  போலீசார் 25 பேர் பலியானார்கள்.

மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் நடத்திய இந்த தாக்குதல் இந்தாண்டில் மிகப்பெரியதாகும்.
மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள மாவோயிஸ்ட்கள் இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் வீரமரணமானது வீணாகாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது போன்று வீரர்களின் வீரமரணமானது ஒரு போதும் வீணாகாது என்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்