முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகமெங்கும் இன்று ‘பாகுபலி–2’ ரிலீஸ்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      சினிமா
Image Unavailable

சென்னை  - ராஜ்மல்லி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் – ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், இன்று (28ந் தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது. 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தியாவில் 6500 தியேட்டர்கள், வெளிநாட்டில் 2000 என மொத்தமாக 8500 திரையங்குகளில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக நகரங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் வேகவேகமாக விற்று வருகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க முதல் மூன்று நாள்களுக்கு நூறு சதவிகித வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 1 படம் இந்தியாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது, முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 54 கோடி வசூலாகி சாதனை படைத்தது. கடைசியில் இதன் வசூல் ரூ. 650 கோடியை எட்டிப்பிடித்தது. இதையடுத்து பாகுபலி–2 முதல் நாளன்றே ரூ.100 கோடி வசூலிக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது.* அமெரிக்காவில் முதல்நாளன்று முன்பதிவுக்கான வசூல் ரூ.19 கோடியை எட்டிப் பிடித்தது தனிப்பெரும் சாதனை படைத்துள்ளது என்று பாகுபலி–2 படத்தின் வினியோக உரிமை பெற்றிருக்கும் கிரேட் இண்டியா பிலிம்ஸ் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.64 லட்சம் மதிப்புக்கு டிக்கெட்டுகள் பதிவாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் 40 ஐமாக்ஸ் ஸ்க்ரீனில் பாகுபலி–2 திரையிடப்படுகிறது. இந்த ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை உயரும் என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

சென்னை உரிமையாளர் அபிராமி ராமநாதன்
* ‘பாகுபலி 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையில் நிலவி வந்த சிக்கல் ஒருவழியாக முடிக்கு வந்தது. சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையைக் கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தங்களுடைய உரிமையை திரும்ப ஒப்படைத்தது. சென்னை உரிமையை அபிராமி ராமநாதனும், செங்கல்பட்டு உரிமையை அருள்பதியும் வாங்கியுள்ளனர். இந்நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. சில மணி நேரத்திலேயே பல திரையரங்குகளில் 4 நாட்களுக்கு அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

44 விநாடி காட்சிகள் கசிந்ததால் அதிர்ச்சி
‘பாகுபலி 2’ தமிழ் பதிப்பின் 44 விநாடி காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. ராணா அரசராக பொறுப்பேற்கும் முக்கிய காட்சிகளாக இடம்பெற்றிருந்து. படக்குழு துரிதமாக செயல்பட்டு, உடனடியாக இணையத்திலிருந்து இக்காட்சிகளை நீக்கியது. மேலும், எங்கிருந்து இக்காட்சிகள் வெளியானது என்பதை விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பாக, கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி அதை உடனடியாக நீக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது காவல்துறை என்பது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்