முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் தென்னை மரங்களுக்கு சிக்கனமான முறையில் பாசனநீர் பயன்படுத்தும் முறையினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், பல்லடம், பனைப்பாளையம் மற்றும் குடிமங்கலம்  ஊராட்சி ஒன்றியம் பூளவாடி ஊராட்சி ரங்கசமுத்திரம் ஆகிய  பகுதிகளில் வேளாண்மைத் துறையின் சார்பில்  தென்னை மரங்களுக்கு சிக்கனமான முறையில் பாசனநீர் பயன்படுத்தும்  முறையினை  விவசாயிகளின்முன்னிலையில்  மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி    நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது
வறட்சியை எதிர்கொள்ளும் வகையில்
நமது மாவட்டத்தில் தற்போது  வறட்சியான சூழல் நிலவி உள்ளது. வறட்சியினை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறுவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில்,  தென்னை மரத்திலிருந்து 2.5 - 3 அடி தூரத்தில் 3 - 4 அடி ஆழம் வரை 4”  வட்டக்குழி தோண்டி 4” விட்டமுள்ள பைப்பை நிறுத்தி அதில் ஒரு கை குப்பை மற்றும் ஒரு கை மணல் என அடுத்தடுத்து நில மட்டம் வரை  நிரப்ப வேண்டும். பின்னர் பைப்பை அகற்றி அந்த குழியில் தண்ணீர் விடவேண்டும். இதனால் தண்ணீர் ஆவியாகமலும் மற்ற வழிகளில் நீர் வீணாவதும் தடுக்கப்பட்டு தென்னை மர வேர்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. இத்தகைய நவீன தொழில்நுட்பம் நான்கு 2” இன்ச் பைப் மூலமாகவும் செயல்படுத்தலாம். இத்தகைய நவீன உற்பத்தி முறையை விவசாயிகள் கையாண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.
முன்னதாக, ஆட்களை கொண்டு தென்னைமரங்களைச் சுற்றிகுழி எடுப்பது தற்போது நிலவும் வறட்சியான சூழ்நிலையில் கடினமாக உள்ளதால் றியியல் துறையால் வடிவமைக்கப்பட்ட ஆகர் (துளையிடும் கருவி) கருவியை டிராக்டரில் பொருத்தி துளையிடுவதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின்போது, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள்,   வேளாண்மைத் துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிக்குமார்,உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன்,  விவாசாய சங்கபிரதிநிதிகள், விவசாயிகள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago