முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

  தேனி.-தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீன்தாரிணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர்த்திட்டம்) மற்றும் புது வாழ்வுத்திட்டத்தின் சார்பில் போடிநாயக்கனூர் மற்றும் சின்னமனூர் ஊரகம் மற்றும் நகர்ப்பகுதிகளைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு முகாமினை  மாவட்ட கலெக்டர்.வெங்கடாசலம்,   பார்வையிட்டு ஆய்வு செய்தபின், 214 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சி அளித்து  வங்கிக்கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடனுதவியும் அளித்து வருகிறது. புதிய தொழில் புரிய விருப்பமுள்ளவர்கள் சந்தையில் பொருளுக்கான தேவை என்ன, பொருளின் முக்கியத்துவம் அறிந்து அதன் விற்பனை இடங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து குறைந்த செலவில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கணக்கிட்டு தொழில் தொடங்கிட வேண்டும்.

மேலும், தமிழக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர்த்திட்டம்), புது வாழ்வுத்திட்டம் இணைந்து பெங்களுர், நாகர்கோவில், சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சார்ந்த 34 தனியார் நிறுவனங்களால் இவ்வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. 

முகாமில், மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் படிப்பு படித்த  கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த 1341 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 214 இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசுத்துறைகளின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு துறைகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர்.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது. மகளிர் திட்ட இயக்குநர் கல்யாணசுந்தரம் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் , போடிநாயக்கனூர் வட்டாட்சியர் முருகேசன் , மகளிர் திட்ட உதவித்திட்ட அலுவலர்கள் தங்கப்பாண்டியன் , கந்தசாமி , பாலநரசிம்மலு , முருகேசன் , செல்வராஜ் , புதுவாழ்வுத்திட்ட உதவி அலுவலர் அன்புராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்