முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி அருகே ரூ.23.10 இலட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகக் கட்டிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை

திங்கட்கிழமை, 1 மே 2017      ஈரோடு
Image Unavailable

கோபி அருகேயுள்ள கெட்டிச் செவியூரில் கால்நடை மருந்தகக் கட்டிடம் கட்ட அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை நடத்தினார். கோபி சட்டமன்றம் கெட்டிச் செவியூரில் 1-ந் தேதி காலை 8 மணியளவில் ரூ.23.10 இலட்சம் செலவில் நபார்டு திட்டம் நிதி உதவியுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் மருந்தகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பள்ளி-கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

தொழிலாளர் தினம்

இதில் கூடுதலாக குடிநீர் வசதி, மின் வசதி, கழிவு நீர் கட்டமைப்புகள், வெளிப்புற நோயாளிக் கூடம் அமைக்கப்படுகிறது. முன்னதாக மே ஒன்று தொழிலாளர் தினத்தையொட்டி கோபி அருகே கங்கம்பாளையம் பிரிவு, ஜீவா பணிமனை, பஸ் நிலையம் எதிரே மெயின்ரோடு, கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கம் எதிரில், கொளப்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் செங்கோட்டையன் கொடியேற்றி வைத்தார்.

அவருடன் ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணியம், சிறுவலூர் மனோகரன், நம்பியூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கந்தசாமி, கலிங்கியம் அருள் ராமச்சந்திரன், கோபி வேலுமணி நகர்வார்டு செயலாளர் செல்வராஜ், காசிபாளையம் பேரூராட்சி தலைவர் மணி (எ) சந்திர சேகர், சிங்கிரிபாளையம் தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர் வேலுச்சாமி, கொளப்பலூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்