முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப்பணிகள் விரைவில் மேற்கொள்ளபடும் : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

 கட்டிடப்பணிகள்

இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசியதாவது .தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலாண்டாம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் தங்களின் சுகாதாரத் தேவைகளுக்காகவும், மருத்துவ சேவைகளுக்காகவும் அவரவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டுமென்பதற்காக இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலாண்டாம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள 1500 மக்கள் பயன் பெறும் வகையில் இந்நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கவனத்திற்கு கொணடு சென்று தேவையான நிதி ஒதுக்கீடினை பெற்று புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதுவரை தற்காலிகமாக பாலாண்டாம்பட்டி சமுதாயக் கூடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும். எனவே இத்தகைய தமிழக அரசின் திட்டங்களை பொது மக்கள் உரிய முறையில் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்; பி.ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.பரணிதரன், விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் ,செவிலியர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்