முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய்யான தகவல்கள் கூறியதாக புகார்: கனடாவில் சீக்கிய அமைச்சரை நீக்க எதிர்க்கட்சி வலியுறுத்தல்

புதன்கிழமை, 3 மே 2017      உலகம்
Image Unavailable

ஒட்டாவா  - கனடாவில் பொய்யான தகவல்கள் கூறியதாக புகார் தொடர்பாக சீக்கிய ராணுவ அமைச்சரை நீக்க எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது.

இந்திய வம்சாவளி...
கனடாவில் ராணுவ அமைச்சராக ஹர்ஜித் சஜ்ஜன் இருக்கிறார். சீக்கியரான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கனடா ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இவர் இந்தியா வந்திருந்த போது ராணுவத்தில் தான் பணிபுரிந்த போது செய்த சாதனைகளையும், வீர தீர செயல்களையும் விளக்கி பேசினார். 2006-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்ததாக தெரிவித்தார்.

குற்றச்சாட்டு
ஆனால் அதில் தலிபான்கள் தாக்கியதில் 12 கனடா ராணுவ வீரர்களும், 14 இங்கிலாந்து வீரர்களும் உயிரிழந்தனர். எனவே இவர் உண்மைக்கு மாறாக பொய்களை சொல்லி கனடா மக்களை வழி தவறி நடத்த முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் ரோனா அம்புரோஸ் குற்றம் சாட்டினர். மேலும் பொய்யான தகவல்கள் கூறிய அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார். இதே கருத்தை சிறிய எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் பிரதமர் ஜஸ்டின் டியூட்ரூ முன்னிலையில் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்