முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் நகரில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்

வியாழக்கிழமை, 4 மே 2017      திருநெல்வேலி

 சங்கரன்கோவில் நகரில் காவல்துறை சார்பில் 34 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்திற்கான துவக்க பணி தொடங்கி வைக்கப்பட்டது.

 கேமரா பொருத்தும் பணி

சங்கரன்கோவில் நகரில் பெருகி வரும் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நெல்லை எஸ்பி விக்கிரமன் ஆலோசனையின் பேரில் டிஎஸ்பி இராஜேந்திரன் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. மதுரை விசன் இந்தியா நிறுவனத்தின் சார்பில் இலவசமாக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முன்வந்தனர். அதன் பேரில் நேற்று கோவில் வாசலில் இதற்கான துவக்க விழா நடைபெற்றது.  இதற்கு சங்கரன்கோவில் டிஎஸ்பி இராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரசபை ஆணையாளர் இராஜேந்திரன், விசன் இந்தியா நிர்வாகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்க தலைவர் முத்தையா, செயலாளர் குருநாதன், ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி, நகை கடை சங்க நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், மாரிமுத்து, செஞ்சிலுவை சங்க தலைவர் அரிகரசுப்பிரமணியன்,, புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் இன்பராஜ், டவுண் இன்ஸ்பெக்டர் அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பராமரிக்க வேண்டும்

காவல்துறையின் இந்த முயற்சியை வர்த்தக சங்க தலைவர் முத்தையா பாராட்டி பேசினார். இதன் மூலம் குற்றங்கள் குறையும் எனவும், அதே நேரத்தில் இதை நிறுவுவதோடு தனது கடமை முடிந்து விட்டது என எண்ணாமால் அதை தொடர்ந்து நல்ல முறையில் இயங்க பராமரிக்க வேண்டும் என்றார். இது சிறப்பாக அமைய வர்த்தக சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்