முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்ரா பவுர்ணமியையட்டி அண்ணாமலையார் கோவில், தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 சித்ரா பவுர்ணமியையட்டி கிரிவல பக்தர்களுக்கு செய்து தரப்படவுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தற்காலிக பேருந்து நிலையங்களை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறப்புபேருந்து

திருவண்ணாமலையில் சித்தர்கள் வலம் வருவதாக நம்பப்படும் சித்ரா பவுர்ணமிநாளில் வரும் 10ந் தேதி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. பல சிறப்புகள் வாய்ந்த சித்ரா பவுர்ணமி, ஹேவிளம்பி ஆண்டான இந்த ஆண்டு நாளை 9ந் தேதி (செவவாய்கிழமை) பின்னிரவு 12.09 மணிக்குமேல் தொடங்கி மறுநாள் 10ந் தேதி (புதன்கிழமை) பின்னிரவு 3.05 மணிக்கு முடிவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவில் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களிலிருந்துவரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளனர். பயணிகள் வசதிக்காக 35 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக 42 குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆவீன் நிறுவனத்தின் சார்பாக 16 இடங்களில் பால் மோர் லசி போன்றவை விற்பனை செய்யும் கடைகள் இயங்கப்படவுள்ளது. கிரிவலப் பாதையில் 37 இடங்ககளில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையின் சார்பில் பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் 18 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் 85 இடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2900 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தி.மலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேற்று மாலை 6 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திண்டிவனம் சாலையிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும், அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, உதவி கண்காணிப்பாளர் ரவளிபிரியா, கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா, நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் இரா.இரவி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்