செங்கல்பட்டு மாவட்ட சிறையில் விசாரணை கைதி தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட சிறையில், விசாரணை கைதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

 காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுமாவட்ட சிறை உள்ளது. இங்கு, கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதிகள் அடைத்து வைத்துள்ளனர்.

மயங்கிய நிலை

சென்னை, கோவிலம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் துரை, 47; இவன், கடந்த ஏப்ரல் மாதம், 5ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரையை கைது செய்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, துரையை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார். அதன் பின், அவனை, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், காலை 7:40 மணிக்கு, சிறை வளாகத்தில் உள்ள சமையல் அறையில், துரை, துாக்கிட்டு மயங்கிய நிலையில் இருந்தான். அருகிலிந்த போலீசார் அவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, துரை உயிரிழந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: