முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் மே 9 - 13ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருச்சி

சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் நாளை (மே 9-ம்) தேதி முதல் 13-ம் தேதிவரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளனர்.

சிருங்கேரி சங்கராச்சியார்கள் வருகை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வரவேற்பு குழு உறுப்பினர் அகஸ்தியர் கோபாலகிரு~;ணன் கூறியதாவது: ஆதிசங்கரர் பாரததேசமெங்கும் பாதயாத்திரை மேற்கொண்டு அத்வைத சித்தாந்தத்தை நிலை பெறச்செய்ததோடு அதன் மூலம் மக்கள் சனாதன தர்ம நெறியில் வாழும் வழிகளை காட்டியருளினார்.

5 ஆண்டுகள்

சக்தி வழிபாட்டிற்கு உயர் முக்கியத்துவம் கொடுத்த ஆதிசங்கரர், பாரத நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு பிரசார பீடங்களை நிறுவினார். அவை கிழக்கே பூரியில் பூர்வாம்னாய கோவர்த்தன பீடம், மேற்கே ப~pனாம்னாய துவாரகாபீடம், வடக்கே பத்ரிநாத்தில் உத்தராம்னாய காளிகா பீடம் (ஜோதிர்மடம்), தெற்கே சிருங்கேரியில் த~pணாம்னாய சாரதாபீடம் ஆகியவையாகும்.

இதில் த~pணாம்னாய சிருங்கேரி சாராதபீடத்தில் தற்போது பீடாதிபதியாக இருப்பவர் 36வது பட்டம் ஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் ஆவார். சங்கராச்சார்யார்கள் உலக நன்மைக்காக அவ்வப்போது விஜயயாத்திரை எனும் பெயரில் திக்விஜயம் செய்து, பக்தர்களையும், சீடர்களையும் சந்தித்து அருளாசி வழங்குவது வழக்கம்.இவ்வகையில் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் 5 ஆண்டுகளுக்கு முன் 2012ல் தமிழகத்தில் விஜயயாத்திரை மேற்கொண்டபோது ஸ்ரீரங்கம் வந்திருந்தார். அதன்பிறகு தற்போது 2017ல் தமிழகத்தில், இளையபட்டம் ஸ்ரீஸ்ரீவிதுசேகரபாரதி சுவாமிகளுடன் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வந்த சுவாமிகள் இருவரும் தற்போது தென்மாவட்டங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வரும் மே 9ம் தேதி கரூர் மாவட்டம் மகாதானபுரத்திலிருந்து புறப்பட்டு அன்று மாலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் வருகின்றனர். அவர்களுக்கு உள்@ர் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அன்று முதல் ஐந்து நாட்கள் ( மே 13ஆம் தேதிவரை) ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்தில் சுவாமிகள் இருவரும் முகாமிடுகின்றனர். முகாம் நாட்களில் தினமும் மாலையில் சுவாமிகள் இருவரும் சாரதா–சந்திரமவுளீஸ்வரர் பூஜை நடத்துவதுடன். காலை மாலை இருவேளைகளிலும் பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு அருளாசி வழங்க உள்ளனர். முகாம் நாட்களில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் குணசீலம் கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடத்த உள்ளனர். சுவாமிகளை சந்தித்து அருளாசிபெற வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு முகாம் நடைபெறும் 5 நாட்களிலும் பகல், இரவு நேரங்களில் ஸ்ரீரங்கம் சிருங்கேரி சங்கரமடத்தில் சிறப்பு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிருங்கேரி சங்கராச்சார்யார்களின் திருச்சி–ஸ்ரீரங்கம் வருகைக்கான ஏற்பாடுகளை, சிருங்கேரி சுவாமிகள் வரவேற்புக்குழுவினருடன் ஸ்ரீரங்கம் சிருங்கேரி சங்கரமடம் தர்மாதிகாரி ரங்கராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்