சிராவயலில் மே 14ல் ஜல்லிக்கட்டு விழா: 650 காளைகள் பங்கேற்க ஏற்பாடு

jalli

சிவகங்கை.திருப்புத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு மைதானத்தில்ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தியவர்களின்வெற்றிவிழாவாக மே 14ல் சிறப்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள்அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் நிவாஸ் ராம்நாத்கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தியதால் தடை நீங்கிதற்போது ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடைபெறுகிறது. அப்போராட்டக்காரர்களின்வெற்றிவிழாவாக சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் சிறப்பு ஜல்லிக்கட்டு மே14ல் நடத்தப்படும்.ஜல்லிக்கட்டு காலை 7:00மணிக்கு துவங்கும்.
மூன்று மருத்துவக்கண்காணிப்புக்குழுக்கள் செயல்படும். சிவ கங்கை, மதுரை,தேனி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டமாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகள் பங்கேற்க உள்ளன. காளைகளின் உரிமையாளர்களுக்குஉணவு,குடிநீர் வசதி அளிக்கப்படும். டோக்கன் வரிசைப்படி காளைகள் அவிழ்க்கப்படும்.மோட்டார்சைக்கிள், சைக்கிள்,தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, அண்டா,குத்துவிளக்கு போன்ற பல பரிசுகள் வழங்கப்படும். என்றார்.சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு அமைப்பாளர் வேலுச்சாமி,ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ