சிவகங்கை மாவட்டத்தில் “கோடைக் கால சிறப்பு ஓவியங்கள்” கண்காட்சி கலெக்டர் .மலர்விழி, துவக்கி வைத்தார்.

sivagangai

சிவகங்கை -சிவகங்கை அரசு அருங்காட்சியகமும், மானாமதுரை ஜெனிஸ் ஓவியக் கலைக்கூடமும் இணைந்து நடத்தும் “கோடைக் கால சிறப்பு ஓவியங்கள்” கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, துவக்கி வைத்து பேசியதாவது,
    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவம், தனித்திறமை இருக்கும். பெற்றோர்கள் சரியான வழியில் தங்கள் குழந்தைகளின் தனித்திறமையை தெரிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பெற்றோர்களின் கனவுகளை தங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காமலும், அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய இயந்திரமாக குழந்தைகளை பார்க்க வேண்டாம் எனவும், அவர்களின் தனித்தன்மையை ஊக்குவித்து நமது நாட்டின் ஒரு நல்ல குடிமகனாகவும், நல்ல குடிமகளாகவும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.             மானாமதுரை ஜெனிஸ் கலைக்கூட ஓவியர் திரு.செல்வம் மற்றும் அவர்களது குழந்தைகளின் ஓவியத் திறனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டினார்.
      இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் செல்வம், அருங்காட்சியகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ