முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி 3 ஆண்டுகளாக கறுப்பு பணத்தை மறைத்து வைத்துள்ளது - கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சி 3 ஆண்டுகளாக கறுப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ளது என்று கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு உண்மையான விவரங்களை ஆம் ஆத்மி அளிக்கவில்லை என்கிறார் அவர். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதன் மூலம் கட்சித் தொண்டர்களையும், மக்களையும் ஆம் ஆத்மி ஏமாற்றி வருகிறது என்று அவர் மேலும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

“உண்மையில் இல்லாத பல போல் நிறுவனங்கள் ஆம் ஆத்மிக்கு நிதி அளிக்கின்றனர். இவர்களில் பலர் ஆக்சிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தனர். பணமதிப்பு நீக்கத்தின் போது சோதனைகளையும் இந்த நிறுவனங்கள் எதிர்கொண்டன.
ஆம் ஆத்மி கட்சிக்கு  வங்கிகளில் வைத்திருக்கும் தொகையை விட குறைவாகவே தனது இணையதளத்தில் காட்டியுள்ளது. நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்று யாரும் இல்லை.  இணையதளத்தில் ரூ.9 கோடி காட்டப்பட்டுள்ளது, உண்மையான தொகை ரூ.45 கோடி.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக இருந்தார் என்பதற்கு இந்த ஆவணங்களே சாட்சி” என்ற கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஷிவ் சரண் கோயல் இத்தகைய போலி நிறுவனங்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்