முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்களுடன் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      தஞ்சாவூர்
Image Unavailable

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூபாய் 47 கோடி வரப்பெற்றுள்ளது. நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை சீர் செய்ய கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்களுடன் மற்றும் தொழிற்சங்கங்களுடன் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,தமிழக முதல்வர் மக்கள் இயல்பு வாழ்;க்கை பாதிக்காத வகையில அனைத்து அரசு பேருந்துகளும் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களில் சிலர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால், தமிழக அரசு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வர பெற்றுள்ளது. இந்த நிதி தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும்.அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 சதவிகித பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகளை இயக்குவதற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பட்டியலை பெற்று அரசு பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை கொண்டு பொது மக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். இன்று முதல் 90 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பேருந்து இயக்குவதை தடை செய்தால், பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையின் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தற்காலிகமாக 150 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளார்கள் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், .கா.., கும்பகோணம் சார் கலெக்டர் பிரதீப் குமார், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், வணிக மேலாளர் பார்த்தீபன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க உறுப்பினர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்