முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி எந்தக் கட்சியோடு கூட்டுசேர்வார் என்பதையும் ஆண்டவனே முடிவு செய்வார் - தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல்

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் முடிவு செய்வார் என ரஜினிகாந்த் கூறுவதைப் போல் அவர் மாநிலக் கட்சியோடு சேர்வதையும் அல்லது  தேசியக் கட்சியோடு சேர்வதையும் ஆண்டவனிடமே நான் விட்டு விடுகிறேன்" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கிண்டலாக கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட, வட்ட, கோட்ட நிர்வகாகிகளுடனான சந்திப்பு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மின் வெட்டை போக்க இது வரையில் இல்லாத வகையில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு தனியாரிடம் 5 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கிய நிலையில் தற்பொழுது 2 ரூபாய் 90 பைசாவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் மின் வெட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சினையைப் போக்க தமிழக அரசை விட மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

விலை  குறைக்கப்பட்டு உள்ளது

ஜி.எஸ்.டி மசோதா மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய செலாவணியாக ரூ.4,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கதர் துறையில் மட்டும் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரி சோதனை

தமிழகத்தில் 56 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சோதனை நடைபெற்ற போது அவர்கள் ஆதரவு கூட்டணி கட்சிகள் ஜனநாயகப் படுகொலை, காழ்ப்புனர்ச்சியால் பாஜக இவ்வாறு செய்கிறது எனக் கூறினார்கள். ஆனால் முகர்ஜி வீட்டில் 300 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர் லண்டன் சென்றிருக்கிறார். இதற்கு ஆதரவுக் கட்சியினர் என்ன சொல்லப் போகிறீர்கள்.

ஊழல் யார் செய்தாலும் தண்டனை

ஊழல் யார் செய்தாலும், பாஜகவினராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்படுவார்கள்.  வேலூரில் நடைபெற்ற டாஸ்மாக் போராட்டத்தில் போலீசார் பெண்கள் மீது நடத்திய தாக்குலை வன்மையாக கண்டிக்கிறேன்.  உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் இரட்டை இலை கிடைக்கிறதோ அல்லது கிடைக்கவில்லையோ உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவதற்கு இந்த அரசு முயற்ச்சிக்க கூடாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் மக்கள் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.

பிரதமர் யாரை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு சந்தித்து வருகிறார். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு சிலர் திட்டமிட்டு அவருக்கு கலங்கம் ஏற்படுத்த வகையில் உள் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

பாஜகவிடம் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பாஜகவிடம் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் ஸ்டாலினும், திருமாவளவனும் ஏன் பதறுகிறார்கள். அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் முடிவு செய்வார் என ரஜினிகாந்த் கூறுவதை போல் அவர் மாநிலக் கட்சியோடு சேர்வதும் தேசியக் கட்சியோடு சேர்வதும் ஆண்டவனிடமே நான் விட்டு விடுகிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்