முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி இரண்டு நபர்களுக்கு வருவாய் அலுவலர் வழங்கினார்

திங்கட்கிழமை, 22 மே 2017      மதுரை
Image Unavailable

   மதுரை.-மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கூ.வேலுச்சாமி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட வருவாய் அலுவலர்  மனுக்களை அளித்தனர்.

 இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்ற கோரியது, சாதிச்சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள், மற்றும் பட்டா மாறுதல் கோரி 87 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 23 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 19 மனுக்களும், முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 65 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 31 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 12, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 21 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 24 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாகவும், தொழிலாளர் நல வாரியம் தொடர்பாகவும் 8 மனுக்களும் மற்றும் இதர 74 மனுக்களும் என மொத்தம் 364 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

முன்னதாக முதுகுத்தண்டுவடம், நரம்பு உறை தேய்வு நோய் மற்றும் தண்டுவட குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி முன்னாள் முதல்வர் அவர்களால் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது தலா ரூ.20,000 மதிப்பில் இரண்டு நபர்களுக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.

       இக்கூட்டத்தில், மாவட்;ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.செந்தில்குமாரி, மதுரை வருவாய் கோட்டாட்சியர்(பொ.) மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ரெகோபயான், உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்