மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆய்வு

vnr news

சாத்தூர். -சாத்தூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கடந்த ஒருமாதமாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. மக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வெயில் தாக்கத்தால் மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்ட நிலையில் காணப்பட்டன. இந்நிலையில் சாத்தூர் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராமங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைநீர் நிறைந்து காணப்படுகின்றது. கனமழையால் சாத்தூர் ஆலங்குளம் அருகே கொங்கன்குளத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்தது. மேலும் மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சம்பவத்தை கேள்விப்பட்ட சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அங்கன்வாடி மையத்தை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் அங்கன்வாடி கட்டிடத்தின் உயரத்தை கூட்டவும், முன் பகுதியில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கவும் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராம மக்களிடம் எம்எல்ஏ தெரிவித்தார். மேலும் மழைநீர் எளிதாக செல்லும் வகையில் ரூ.2லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும் என்றும் எம்எல்ஏ தெரிவித்தார். தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகள் கேட்டரிந்து மனு வாங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் அழகர்சாமி, மாரியப்பன், பொன்னுப்பாண்டி, சங்கரன், பரமானந்தவேலு, பொன்னுச்சாமி பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ