முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாதுமணல் கணக்கெடுப்பு குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம், கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தாதுமணல் கணக்கெடுப்பு மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர்மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான குழுக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள், ஆய்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து கலெக்டர்குழுவினருக்கு எடுத்துக் கூறினார்கள். பின்னர் கலெக்டர்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

 நீதிமன்ற உத்தரவு

மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு தாதுமணல் இருப்பு குறித்த கணக்கெடுப்பு செய்திட சத்யபிரதாசாகு அவர்களை நியமித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாதுமணல் கணக்கெடுப்பு பணிகளுக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ்  தலைமையிலும், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி  தலைமையிலும், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி  தலைமையிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிக்க திட்டம்

இக்குழுவில் சர்வே குழுவினரும், அட்டாமிக் மினரல்ஸ் துறை (ஹஆனு) குழுவினரும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்  கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தாதுமணல் கணக்கெடுப்பு பணிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது. 10 தினங்களுக்குள் கணக்கெடுப்பு பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர்மு.கருணாகரன்  தெரிவித்துள்ளார்கள்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் வட்டாட்சியர்கள், அளவையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து