முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரமேரூர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் காஞ்சி எம்.பி பங்கேற்ப்பு

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் 1426-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 16 முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட சார் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார்.

ஜமாபந்தி

சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி, வட்டாட்சியர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார். துணை வட்டாட்சியர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மானாம்பதி, உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பொது மக்கள் மனுக்கள் பெறப்பட்டன. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏவும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டா மாற்றம், புதிய பட்டா 16 நபர்களுக்கும், திருமண உதவித் தொகை 5 நபர்களுக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, அண்ணாமலை, சசிகுமார், புலியூர் பழனி, துரை, விஜய், கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டு கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து