முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு தேசம் மாநாட்டில் 33 தீர்மானங்கள் : சந்திரபாபு நாயுடு மீண்டும் தலைவராக தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

விசாகபட்டினம் : தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 33 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் 36-வது மாநாடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த மாநாட்டில், ஆந்திர மாநிலம் தொடர்பாக 21, தெலங்கானா மாநிலம் தொடர்பாக 9 மற்றும் பொதுவாக 3 என மொத்தம் 33 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

முதலில் மாநாட்டுக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை அக்கட்சியை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி. கள் வரவேற்றனர். பின்னர் சந்திரபாபு நாயுடு அங்கு ஏற்பாடு செய்திருந்த கட்சியின் புகைப்பட கண்காட்சி, ரத்ததான முகாமை திறந்து வைத்தார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து என்.டி.ராமாராவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியபோது, “நமது கட்சி தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும். இதற்காக தொண்டர்களை போல பதவி வித்தியாசமின்றி அனைவரும் பாடுபட வேண்டும். தெலங்கானாவிலும் கட்சியை பலப்படுத்தி அடுத்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும்” என்றார்.

மறைந்த முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் நடிகருமான என்.டி. ராமாராவின் பிறந்த நாள் விழா ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநாட்டிலும் என்.டி ராமாராவுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து