முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் 178 பயனாளிகளுக்கு 1424 கிராம் தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ. 67 லட்சத்து 25 ஆயிரத்துக்காகன காசோலை: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 178 பயனாளிகளுக்கு ரூ. 43 இலட்சத்து 99 ஆயிரத்து 92 மதிப்பில் 1424 கிராம் தாலிக்கு தங்கமும் மற்றும் ரூ. 67 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவிகளையும் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 11 இலட்சத்து 24 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத்திட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் இன்று (28.05.2017) வழங்கினார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமை வகித்தார்.

திருமண நிதியுதவி

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது :-புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இன்று (28.05.2017) படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் 178 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 178 8 கிராம் 1424 கிராம் தங்கமும் மற்றும் திருமணநிதியுதவியாக ரூ. 67 இலட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதில் 91 பேர் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். இந்த சிறப்பு வாய்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2016-17ம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் 18,836 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 75,344 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 63,42,00,000- வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் மட்டும் 6532 பயனாளிகள் ஆவார்கள்.

தற்போது 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் 178 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 1424 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 67,25,000ஃ- வழங்கப்படுகிறது. இதில் 91 நபர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். தருமபுரி மாவட்டத்தில் புதியதாக சட்டக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் நடப்புக் கல்வியாண்டில் 3 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும், 5 ஆண்டு பிரிவில் 80 மாணவர்களும் என மொத்தம் 160 மாணவர்கள் சட்டம் பயில புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு வாய்ப்பளித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.

முன்னதாக தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் வளாக மானிய தொகையாக தருமபுரி, சோகத்தூர் மெர்ஸிஹோம் நிறுவனத்திற்கு ரூ. 12 இலட்சத்து 60 ஆயிரத்து 420- மதிப்பிலான காசோலைகளை கோவிலூர் நிர்மலா ஆர்பனேஜ் ரிNகிபிலிடேஷன் சென்டர் நிறுவனத்திற்கு ரூ. 12 இலட்சத்து 22 ஆயிரத்து 926- மதிப்பிலான காசோலையினையும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 1000ஃ-, இரண்டாவது பரிவு ரூ. 500-, மூன்றாவது பரிசு ரூ. 300ஃ-க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் எஸ். ரேவதி, கோட்டாட்சியர் இராமமூர்த்தி, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, மத்திய கூட்டுறவு இயக்குநர் பொன்வேல், பால்வள துணை தலைவர் டி.கே. பெரியசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் நிர்மலா கோவிந்தசாமி, கோபால், நல்லம்பள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம் உட்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து