முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கு ஜூன் 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் 5 மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அரசு சட்டக்கல்லூரிகளில் ஜூன் 2-ம் தேதி முதலும், சீர்மிகு சட்டப்பள்ளியில் நாளை  முதலும் வழங்கப்படுகின்றன. சட்டம் பயில்வதற்கான வயது உச்சவரம்பை முற்றிலும் தளர்த்தி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படவுள்ள 3 சட்டக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி,பி.ஏ. எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு வரும் 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுவதாகவும், ஜூன் மாதம் 23-ம் தேதி வரை வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அன்றைய நாளிலே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு வரும் 7-ம் தேதி முதல், ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுவதாகவும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை 17ம் தேதி என்றும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை  முதல், வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு நாளை மறுநாள் முதல், அடுத்த மாதம் 30-ம் தேதி வரையும், 2 ஆண்டு  எல்.எல்.எம் , எம்.ஜி.எல்  மற்றும் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல், ஜூலை 28-ம் தேதி வரையும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களை, tndalu.ac.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து