அழிசூர் கிராமத்தில் ஸ்ரீஎல்லையம்மனுக்கு நவகலச சிறப்பு அபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் நேற்று நவகலச சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

அபிஷேகம்

காலை புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு நவகலசங்களில் அபிஷேகம் ஆராதனை வெகு விமரிசையாக நடந்தது. இதைத் தொடர்ந்து பிடாரி செல்லியம்மன் கோவிலிலிருந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மஞ்சலாடை அணிந்து சிறப்பு பூஜைகள் முடிந்த பின் பால் குடங்களுடன் பம்பை உடுக்கை முழங்க, தார தப்படை, மேளதாள வாத்தியங்களோடு கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பக்தர்கள் கைகலால் அம்மனுக்கு பாலை ஊற்ற பாலாபிஷேகம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா குழுவினர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு அழிசூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் செல்லன், ஒன்றிய கவுன்சீலர் அழிசூர் கன்னியப்பன், நாட்டாமை தாரர்கள் வீரராகவன், குமார், மகாவிஷ்ணு, சுப்பரமணி, ஏழுமலை, செல்வம், காளிதாஸ் உட்பட விழா குழுவினர் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து