புதுக்கோட்டை மாவட்டம் செந்தூரான் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் வாரியத் தேர்வில் சாதனை : கலெக்டர் கணேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      புதுக்கோட்டை
Puthukottai 2017 06 06

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திருமயம் வட்டம், லேணா விளக்கில் செந்தூரான் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு வாரியத் தேர்வில் மாநிலஅளவில் சாதனை புரிந்ததையொட்டி மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், நேரில் அழைத்து பாராட்டி கூறியதாவது.

சாதனை

புதக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லேணாவிளக்கில் செந்தூரான் பல் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்;ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேஸன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்;ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் ஆகிய 5 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் தற்பொழுது 1400 மாணவ, மாணவிகள் பயின்று வருவதுடன் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் பரிந்துரைத்த அனைத்த உபகரணங்களும் நிறுவப்பட்டு தகுதி வாய்ந்த 90 ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக பயிற்சி வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிக்கேஸன் பாடப்பிரிவில் பயிலும் மாணவி சந்தியா ஏப்ரல்- 2017ல் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 489 கல்லூரிகளில் 791,800 மதிப்பெண்ணும், முதலாமாண்டு இயந்திரவியல் துறை மாணவன் சாலிஹீன்ஜமீல் 789,800 மதிப்பெண்ணும் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர். இரண்டாமாண்டு எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் பயிலும் மாணவன் சிவக்குமார் அரசு வாரியத் தேர்வில் 690,700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனைப் படைத்துள்ளார்.

அதே போல் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவன் மதன்குமார் 682,700 மதிப்பெண்ணும், இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவன் சீனிவாசன்; 681,700 மதிப்பெண்ணும் பெற்று தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மண்டல அளவில் சாதனை புரிந்துள்ளனர். இதே இதர துறையைச் சார்ந்த மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மாவட்ட அளவில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். மேலும், 99 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்று மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார்.

இந்நிகழ்ச்சியில் செந்தூரான் கல்விக் குழுமத் தலைவர் ஆர்.வைரவன், உபத்தலைவர் எஸ்.நடராஜன், முதன்மைச் செயல் அலுவலர் எஸ்.கார்த்திக், கல்லூரி முதல்வர் எஸ்.ஜி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து