மன்னார்குடியில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் : கலெக்டர் நிர்மல் ராஜ் தொடங்கிவைத்தார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருவாரூர்
Thiruvarur 2017 06 08

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், கொரடாச்சேரி வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தொடங்கிவைத்தார்.

பயிற்சி முகாம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது..... நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் மண்ணில் ஈரத்தை நிலைநிறுத்துதல், மழை நீரை திறம்பட சேமித்தல், வறட்சி தாங்கக் கூடிய குறுகிய கால பயிர் ரகங்களை சாகுபடி செய்தல், மண்வளத்தை அதிகரிக்க உயிர் உரங்கள், நுண் சத்துகளை இடுதல் , விவசாயிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து அவர்களது திறனை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டிய விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 4000 எக்டர் அளவில் 4 மானாவாரி தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.4 தொடர்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.3-5 முன்னோடி விவசாயிகள் அடங்கிய வேளாண் சார்புதுறை அலுலர்களுடன் தொகுப்பு மேம்பாட்டு அணி வட்டார வேளாண்மை அலுவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.4 தொகுப்பிலும் 4000 எக்டரில் மேற்கொள்ளப்பட உள்ள பயிர்சாகுபடி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.முதலாண்டு திட்ட செயலாக்கதிற்கான ரூ.25.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. உழவு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.500 வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும், விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தெரிவு செய்யப்பட்டு , ஆரம்பகால பணி துவங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ்,கிராம அளவிலான பயிற்சி 200 விவசாயிகளுக்கு நடத்தப்படுகிறது.நீடாமங்கலம் தொகுப்பிலிருந்து 50 விவசாயிகளும்,கோட்டூர் தொகுப்பிலிருந்து 50 விவசாயிகளும், மன்னார்குடி தொகுப்பிலிருந்து 50 மற்றும் கொரடாச்சேரி வட்டாரத் தொகுப்பிலிருந்து 50 விவசாயிகளும், ஆக மொத்தம் 200 விவசாயிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.இப்பயிற்சி முகாமை வேளாண் குடிமக்கள் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வகையில் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு, ஈடுபொருட்கள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் மயில்வாகணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன்,தமிழக காவேரி டெல்டா விவசாய சங்க தலைவர் காவேரி ரெங்கநாதன் , துணை இயக்குநர் மதியழகன்,துணை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆட்சித்தலைரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து