பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருவள்ளூர்
Ponneri 2017 06 08

பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு பசலி 2016-2017 ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மனுக்கள்

பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன்,தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சியில் வருவாய் கிராமங்களின் அடிப்படையில் அனைத்து கிராம நிலம்,புலம் சம்மந்தப்பட்ட பிரட்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு, லைட்ஹவுஸ், திருப்பாலைவனம், அவுரிவாக்கம், சிருளப்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கும்,பொன்னேரி வார்டு 1,2 உள்ளிட்ட வருவாய் வட்டங்களின் கிராம மக்களின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பெறப்பட்ட 138 மனுக்களில் 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ஜமாபந்தி அலுவலர் கருப்பையா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் ரஜினிகாந்த்,வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன்,திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் நடராஜன்,கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்,தினேஷ்,தேவானந்தம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து