முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (08.06.2017) குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது :

பாதுகாப்பு இல்லங்கள்

 

 

குழந்தைகள் வருங்கால சமுதாயத்தின் சொத்துக்கள் என்பதை உணர்ந்து அனைத்து தரப்பினறும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்கள் 3ம், அரசு நிதியுதவி பெரும் பராமரிப்பு இல்லங்கள் 5ம், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் 47 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் என மாவட்டத்தில் 55 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன.

 

மேற்கண்ட குழந்தை பாதுகாப்பு இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், மாற்றுத்திறனாளி இல்லங்களில் கடைபிடிக்க அரசின் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் இன்றைய தினம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களில் ஒருகிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி குறைந்தபட்ச தரநிர்நயங்கள் கடைபிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் 7 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பிடம், 10 குழந்தைகளுக்கு ஒரு குளியல் அறை, 50 குழந்தைகளுக்கு ஆற்றுனர், மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட 14 அலுவலர்களும், முதலுதவி அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்து உறுதிசெய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி ஏதேனும் காப்பகங்கள் இயங்குகிறதா என்பது குறித்து அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டபிரிவுகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கைபேசி எண்ணிற்கு 98942 10182 அல்லது 98945 18260 புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சி.கலைச்செல்வி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரண்யா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து