நீலகிரியில் அரசு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

17 விடுதிகள்

நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகபிற்படுத்தப்பட்டோர் மாணவர், மாணவியர்களுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 11 விடுதிகளும், மாணவியர்களுக்கு 2 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 3 விடுதிகளும், மாணவியர்களுக்கு 2 விடுதிகளும் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம்
வகுப்பு வரை பயில்கின்றன மாணவ, மாணவியர்களும், கல்லூரி, பாலிடெக்னிக் படிப்புளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரத்தகுதியுடையவர் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்தும் இலவசம்

விடுதிகளில் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்ளுக்கு உணவும், தங்கும் வசதியும், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகளும், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீமேல் இருக்க வேண்டும். இது மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்து அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

வரும் 20_ந் தேதி கடைசிநாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடமும் மற்றும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வரும் 20_ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 15_ந் தேதிக்குள்ளும் சமர்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் வழங்கத்தேவையில்லை. விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது.  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கலெக்டர்
முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து