முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்பை சீன அதிபர் சந்திக்காதது ஏன்?- பரபரப்பு தகவல்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

அஸ்தனா : இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ஒரு சாலை ஒரு பெல்ட் என்ற பாகிஸ்தான் - சீனா பொருளாதார சாலைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ள சீனாவின் நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது பாகிஸ்தான்.’

இந்நிலையில் கஜகஸ்தானில் உள்ள அஸ்தனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து உரையாடினர்.

ஆனால் நட்பு நாடான பாகிஸ்தானின் அதிபர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பை சீன அதிபர் ஜின்பிங் புறக்கணித்துள்ளார். இது மிகவும் விசித்திரமான ஒன்றாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கடத்தப்பட்ட இரண்டு சீனா நாட்டு ஆசிரியர்களை கொன்று விட்டதாக ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்தனர். இந்தக் கொலைக்கு சீன மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தி எழுந்தது.

இதனையடுத்து நவாஸ் ஷெரீப்பை இத்தகைய நிலையில் சந்தித்து உரையாடுவது உகந்ததாக இருக்காது என்று அதிபர் ஜின்பிங் கருதியிருக்கலாம் என்று சீன ஊடகங்கள் தெரிவிப்பதோடு, அதிபர் ஜின்பிங் மோடி உட்பட மற்ற நாட்டு தலைவர்களுடன் உரையாடல் மேற்கொண்டதை சற்றே மிகைப்படுத்தி பதிவு செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து