முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரம்பள்ளம் குளத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      தூத்துக்குடி

கோரம்பள்ளம் குளத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இணைந்து குளம் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:

 தூர்வாரும் பணிகள்

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில் விவசாயப் பணிகளை மேம்படுத்திட பயனீட்டாளர்களின் உதவியுடன் தூர்வாரும்; பணிகள்  துவக்கி வைக்கப்பட்டு, விவசாய மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான கரம்பை மண்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒரு நாளைக்கு 600 யூனிட் அளவு மண்களை இலவசமாக அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்கள்.இப்பணிகளை மேற்கொள்ளவதற்கு முதற்கட்டமாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன பொது மேலாளர் (பொறியியல்) பிரதீப்நாயர்,  உதவி பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) இசக்கியப்பன், வட்டாட்சியர் சங்கரநாரயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து