முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை, திடீர் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதா தயராக உள்ளது என்று மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

திடீர் தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி தயாராக  உள்ளது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்  தெரிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த 1–ந் தேதி முதல் விவசாயிகள் மாபெரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு நடத்தி, சிறு, குறு விவசாயிகளின் ரூ.30 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

அவகாசம் அளிக்கிறோம்

இதைத்தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டம் கடந்த 11–ந் தேதி வாபஸ் ஆனது. அதேசமயம், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு சிவசேனா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் காரணமாக விவசாய சங்க பிரதிநிதிகள் மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து நன்றி கூறினர். அப்போது பேசிய  உத்தவ் தாக்ரே, ”பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்த அடுத்த மாதம் (ஜூலை) வரை அரசுக்கு அவகாசம் அளிக்கிறோம். அடுத்த மாதத்துக்குள் மராட்டிய அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால், மிகப்பெரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

தேர்தலுக்கு தயார்

இந்த நிலையில், நேற்ரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், திடீர் தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராக உள்ளது என்றார். இது குறித்து மேலும் கூறுகையில், “  விவசாயிகள் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது சிலர் ஆட்சியை கவிழ்ப்போம் என்று பேசியுள்ளனர். அரசுக்கு அளித்துள்ள ஆதரவை திரும்ப பெற உள்ளதாகவும்  கூறியுள்ளனர். நான் சொல்வது என்னவெனில், திடீர் தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராகவே உள்ளது. தேர்தலை நோக்கி எங்களை தள்ள வேண்டும் என்று சிலர் நினைத்தால், மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்..)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து