எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார்

sivagangai

 

சிவகங்கை.-சிவகங்கை இணை இயக்குநர் (மருத்துவம்) அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக இரத்த கொடையாளர் தினம் 2017 விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இப்பேரணியில் மாணவியர்கள் "இரத்த தானம் செய்து பிறருக்கு மறுபிறவி தாருங்கள்", "உதிரம் தந்து உயிரைக் காப்போம்", "உலக இரத்த கொடையாளர் தினம் ஜூன் 14", "இரத்த தானம் செய்யுங்கள் அதிவேக சாலையில் அல்ல சாலையோர இரத்த வங்கிகளில்", "உயிர் வாழ உதிரம் தேவை அதற்கு தேவை இரத்த தான சேவை", "பாதுகாப்பான இரத்தத்தை தானம் செய்து எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தடுப்போம்", "உயிரை காப்பாற்ற இரத்தம் கொடுங்கள்", "இரத்த தானம் வாழ்க்கையின் வரம்" எனும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றடைந்தனர். இப்பேரணியைத் தொடர்ந்து 33 இரத்த கொடையாளர்களுக்கும் மற்றும் இரத்த தானம் பற்றி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் வாருணிதேவி, மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.மகேஸ்வரி, நிலைய மருத்துவ அலுவலர் மரு.குழந்தை ஆனந்தன், யு.சு.வு. மைய மருத்துவ அலுவலர் செல்வி.மரு.ஐஸ்வர்யா, செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து