கக்கனின் 108வது பிறந்தநாள் விழா கலெக்டர், எம்.எல்.ஏ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      மதுரை
kakan birthday

மேலூர்.-மதுரை மாவட்டம், மேலூர் அருகே  தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் மணிமண்டபத்தில் தியாகச் செம்மல் கக்கன்ஜி அவர்களின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான்(எ)செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், மேலூர் நகர் செயலாளர் சரவணன், மேலூர் ஒன்றிய செயலாளர் சோமாசி, செய்திமக்கள் தொடர்புத்துறை அதிகாரி செந்தில்அண்ணா, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் பதினெட்டாங்குடி பொன்னுச்சாமி, சூரக்குண்டு துரைஅண்ணா, அம்பலகாரன்பட்டி சேவுகன், நரசிங்கம்பட்டி ஓடையன், கிடாரிப்பட்டி சுரேஷ், கேசம்பட்டி ஆசைத்தம்பி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் வைஸ்சேர்மன் குலோத்துங்கன், அமைப்புசாரா ஓட்டுனர்அணி மாவட்ட செயலாளர் அன்புச்செல்வம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கீழையூர் வேலு, தும்பைப்பட்டி நேரு, கல்லம்பட்டி மீராஉசேன், மேலவளவு சந்திரன், கச்சிராயன்பட்டி வீரபாண்டி, வெள்ளலூர் இளங்கண்ணன், நகர் மாணவர் அணி செயலாளர் கமல், மார்கெட்டிங் சொசைட்டி இயக்குனர் பழனித்துரை, தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, அண்ணா தொழிற்சங்க பொருளாளர் செல்வம், கிளைச் செயலாளர் மணவாளன், அவைத்தலைவர் பிச்சைராஜன், நாவினிப்பட்டி ஆண்டிச்சாமி, அம்மாபேரவை பொருளாளர் தவப்பாண்டி, வட்டச் செயலாளர் இளங்கோ, பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வம், பெரியதுரை, வாசுகி சின்னக்கருப்பன், சுரங்கமலை, மாயாண்டி, நல்லு, மேலூர் வட்டாட்சியர், தமிழ்ச்செல்வி, துணைவட்டாட்சியர் பழனிக்குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து